பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நிகழ்வதாக குற்றம்சாட்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க.விற்கு வாக்களிப்பது கருணாநிதியின் வாரிசுகளுக்கு மட்டுமே பலன் தரும் என்று கூறியிருப்பதால், தமிழகத்தில் உ.பி.க்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நேற்று பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, போபாலில் போபால் – இந்தூர், போபால் – ஜபல்பூர், ராஞ்சி – பாட்னா, தார்வாட் – பெங்களூரு, கோவா – மும்பை ஆகிய 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு, பா.ஜ.க. பூத் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ஊழல்வாதிகள் அனைவரும் பீகார் மாநிலத்தில் கைகோர்த்திருக்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் யாரையும் விடப்போவதில்லை.
பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலனை நீங்கள் விரும்பினால் சமாஜ்வாடிக்கு வாக்களியுங்கள். லாலு குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலன் வேண்டுமானால் ஆர்.ஜே.டி.க்கு வாக்களியுங்கள். சரத்பவார் குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலனை நீங்கள் விரும்பினால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். அப்துல்லா குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலன் வேண்டுமானால் தேசிய மாநாட்டிற்கு வாக்களியுங்கள்.
அதேபோல, கருணாநிதி குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்கள் நலன் வேண்டுமானால் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள். கே.சந்திரசேகர ராவ் குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலன் வேண்டுமானால் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள் மகன், மகள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நலன் வேண்டுமானால், பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுதான் தமிழகத்தில் தி.மு.க.வினரை படு அப்செட்டாக்கி இருக்கிறது.
பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்கும் என்பதால் தி.மு.க.வினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். எனவே, ஸ்டாலினை கண்டு மோடி பயப்படுவதாகவும், இதன் காரணமாகவே மத்திய பிரதேச மாநிலத்துக்குச் சென்று ஸ்டாலினை பற்றி பேசுவதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு, ஆர்கசம் அடைந்து வருகின்றனர். எனினும், உ.பி.க்களின் இந்த கதறலை பார்த்து பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.