பள்ளி மாணவர்கள் கட்டாயம் பைபிள் கொண்டு வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் ரிச்சர்ட் நகரில் கிளாரன்ஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், பயின்று வரும் மாணவ, மாணவியர் அனைவரும் கட்டாயம் பைபிள் கொண்டுவர வேண்டும் என பள்ளி நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மாற்று மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இச்சூழலில், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை மாணவர்கள் மீது திணிக்கும் விதமாக பள்ளி நிர்வாகம் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இதே பள்ளியில் பகவத் கீதையை ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் யாராவது வழங்கி இருந்தால். இந்நேரம், தமிழகத்தை சேர்ந்த போராளிகள், ஊடகங்கள் மற்றும் கழக பத்திரிக்கையாளர்கள் பா.ஜ.க சிறுபான்மை மக்களின் மீது ஹிந்து மதத்தை திணிக்க முயல்கிறது என ஒருவாரம் ஊடக விவாதம் நடத்தி கல்லா கட்டி இருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.