பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சட்டசபையில் நாகூசும் வகையில் பெண்களை பற்றி மிக கேவலமாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். அதில், பெண்கள் படித்திருந்து திருமணம் செய்தால் அவர்களுக்கு எப்படி உடலுறவு வைக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருந்தவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அவர்களும் உடன் சேர்ந்து சிரித்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு இவ்வாறு பேசியது மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பீகார் முதல்வர் திரு நிதீஷ் குமார், சட்டசபையில் இப்படியொரு வார்த்தை பேசியதைக் கேட்பது வருத்தமளிக்கிறது. RJD & I.N.D.I உடன் கூட்டணியில் இருப்பதன் விளைவு. பெண்கள் அதிகாரமளித்தல் பற்றிய அதன் யோசனையை கூட்டணி உணர்ந்தது மற்றும் மறுவரையறை செய்துள்ளது. இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.