பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர், லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ். இவர், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நடந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசினார்.
மேலும், குஜராத்திகள் மட்டுமே நாட்டில் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களது தவறுகள், மோசடிகள் மன்னிக்கப்படுகின்றன என்று கூறினார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த ஹரேஷ்பாய் பிராணசங்கர் மேத்தா என்பவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தேஜஸ்வி யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குஜராத்திகள் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கோரியிருந்தார்.
குஜராத்திகள் விவகாரம் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட
இந்த நிலையில், இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேச்சுக்கு தேஜஸ்வி யாதவ் மன்னிப்புக் கோரி இருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர வேண்டுமா என்று 29-ம் தேதிக்குள் புகார்தாரர் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.
மேலும், தேஜஸ்வி மன்னிப்புக் கேட்டிருப்பதால், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.