பீகார் மக்களுக்கு மூளையே  கிடையாது அமைச்சர் கே.என்.நேரு சர்ச்சை கருத்து..!

பீகார் மக்களுக்கு மூளையே கிடையாது அமைச்சர் கே.என்.நேரு சர்ச்சை கருத்து..!

Share it if you like it

பீகார் உட்பட பல மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு தயாராக உள்ள நிலையில். கல்வியில் மிக சிறந்த மாநிலம் தமிழகம் என்று கூறும் தி.மு.கவினர் இன்று வரை நீட் தேர்விற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்கு கேட்போம் அல்லது மாணவர்களை பிட் அடிக்க அனுமதிப்போம் என்று தி.மு.க மூத்த தலைவர் கே.என். நேரு அவர்கள் முன்பு பேசியது அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

திசைகாட்டு திருச்சி என்ற இணையவழி வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என். நேரு அவர்கள் பேசி கொண்டு இருந்த பொழுது. பீகார் காரனுக்கு மூளை கிடையாது என்று பேசியது அக்கூட்டதில் கலந்து கொண்டவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it