வந்தே மாதரம் தேசிய பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்காமல் அவமதித்ததோடு, இது ஹிந்து தேசமல்ல, ஹிந்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, முதலில் இயற்றப்பட்டது ‘வந்தே மாதரம்’ பாடல்தான். 1880-களில் வங்காள மொழி புலவர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது இப்பாடல். வந்தே மாதரம் என்றால் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்பது பொருள். இப்பாடல்தான் முதலில் தேசிய கீதமாக இருந்தது. ஆனால், இப்பாடல் சுதந்திர வேட்கையா தூண்டும் வகையில் இருந்ததால், இப்பாடலுக்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்ததோடு, இப்பாடலை பாடியவர்களையும் சிறையில் தள்ளினார்கள். இப்பாடலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்தான், ரவீந்திரநாத் தாகூர் ‘ஜன கன மன’ என்கிற பாடலை எழுதினார். 1911-ம் ஆண்டுதான் இப்படால் முதன் முதலில் பாடப்பட்டது. இதன் பிறகுதான் இது தேசிய கீதமாக மாற்றப்பட்டது. எனினும், வந்தே மாதரம் பாடல் தற்போது வரை தேசிய பாடலாகத்தான் இருக்கிறது.
எந்தவொரு அரசு நிகழ்ச்சியும் துவங்கும்போது வந்தே மாதரம் பாடலும், நிகழ்ச்சி நிறைவடையும்போது ஜன கன மன பாடலும் இசைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் சட்டசபை நடக்கும்போது, காலையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பீகார் சட்டசபையில் வந்தேமாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது, மாட்டுத் தீவன ஊழல் புகழ் லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் எம்.எல்.ஏ.வான சவுத் ஆலம் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார்.
இதையடுத்து, சட்டசபை முடிந்து வெளியே வந்த சவுத் ஆலமிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதியான சவுத் ஆலம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது ஒன்றும் ஹிந்து தேசமல்ல. ஆகவே, ஹிந்து மதப் பாடலான வந்தேமாதரம் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமிராக பதிலளித்திருக்கிறார். இஸ்லாமியர்களை பொறுத்தவரை, வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாகக் கருதுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதன் காரணமாகவே, இப்பாடல் பாடப்படும்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எழுந்து நின்று மரியாதை தருவதில்லை. ஏற்கெனவே, இதேபோல் உ.பி. மாநிலம் முசாபர்நகர் நகராட்சிக் கூட்டத்தில் வந்தேமாதரம் பாடல் இசைக்கப்பட்டபோதும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.