மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோட முயன்ற பாதிரியாரை குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் மடக்கி பிடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், மருத்துவ சீட் வாங்கி தருவதாக பாதிரியார் தர்மராஜ் ரசாலம் கூறி இருக்கிறார். இதனை, நம்பி பலர் அவரிடம் பணத்தை கொடுத்து இருக்கின்றனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அவர் மருத்துவ சீட் பெற்றதரவில்லை என்று கூறப்படுகிறது. இவர், கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 14 பேர் உட்பட மொத்தம் 24 பேரிடம் சுமார் 92 லட்சம் வரை பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, பாதிரியாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில், அமலாக்கத் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் மருத்துவ கல்லூரி, பாதிரியார் வீடு மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் செயலாளர் பிரவீன் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, பாதிரியார் தர்மராஜிடம் வெளிநாடு செல்வது என்றால், எங்களின் அனுமதியை பெற்ற பின்பு தான் செல்ல வேண்டும் என அமலாக்கத்துறையினர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். ஆனால், பாதிரியார் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு ஜனம் ஆன்லைன் இணையதள பக்கத்தின் லிங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
/https://janamtv.com/80574001/