பா.ஜ.க. உடன்தான் எங்களது கூட்டணி தொடரும் என அ.தி.மு.க. மூத்த தலைவர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை உடைக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சி வலைகளை பின்னி வருகிறது. எனினும், இதற்கு இடம் அளிக்காமல் அக்கட்சியின் கூட்டணி தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே, அ.தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.பி.உதயகுமார். இவர், சிவகங்கையில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே எந்தவித குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணி உறுதியாக தொடரும் என கூறியுள்ளார். தமிழகத்தில், மன்னர் ஆட்சி புகுந்துள்ளது. தமிழகத்தில், ஐனநாயகத்தை நிலை நிறுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என கூறியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.