ஊராட்சி மன்ற தலைவருக்கு தொல்லை களத்தில் இறங்கி போராட்டம் நடத்திய பா.ஜ.க
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதன்காரணமாக, மக்கள் மத்தியில் பா.ஜ.க.விற்கு நாளுக்கு நாள் செல்வாக்கு கூடி கொண்டே செல்கிறது. அந்தவகையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெளிவான திட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அவரை, குறைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மணி அண்மையில் அலறி இருந்தார்.
அந்தவகையில், தமிழக பா.ஜ.க அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றம். இதன், தலைவராக பா.ஜ.க.வை சேர்ந்த திருமதி. செல்வராணி மகுடீஸ்வரன் இருந்து வருகிறார். இவரை, மக்கள் பணி செய்ய விடாமல் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ஜ.க. தொண்டர்கள் மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்த அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்களை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.