பா.ஜ.க.வின் வளர்ச்சி வேகமாக இருப்பதாகவும் முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் மணி கதறி இருக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்தரிகையாளர் மணி. இவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது. இவரது, பெரும்பாலான பேட்டிகள் தி.மு.க.விற்கு ஆதரவாக மட்டுமே இருக்கும். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அரசை மிக கடுமையாக சாடும் வகையில் இவரது கருத்துக்கள் இருக்கும். அதனை உறுதிப்படுத்தும் பல்வேறு காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
அந்த வகையில், லிபர்ட்டி இணையதள ஊடகத்திற்கு மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில் பா.ஜ.க.வின் வளர்ச்சி மற்றும் தமிழக முதல்வரிடம் இவ்வாறு கோரிக்கை வைத்து இருக்கிறார் ;
முதல்வர் ஸ்டாலின் அருள்கூர்ந்து முதலில் பரிசிலிக்க வேண்டும் என உங்கள் மூலமாக வைக்கும் கோரிக்கை. வழக்கமாக, இந்த மாதிரியான பேட்டிகளில் தகவலை சொல்லிவிட்டு நிறுத்தி விடுவோம். இது, பிரசங்கம் மாதிரி ஆகி விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தயவு செய்து நினைக்க வேண்டாம். நிலைமை மோசமாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது. கடந்த 1998- ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பை கவர் செய்த ரிப்போர்டர் நான். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சார்பாக, 1997 காவலர் செல்வராஜ் படுகொலை சம்பவங்கள். 98 குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து விவரங்களை சேகரிக்க கோவையில் கிட்டதட்ட 15 நாட்கள் தங்கி இருந்தவன்.
கோவை கள நிலவரம் மிக நன்றாக தெரியும். இன்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அங்கு வளர்ந்து இருக்கிறது. ஆ. ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பந்த் அறிவிக்கப்பட்ட போது 90% கடைகள் அடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது, எல்லாம் ஒதுக்கி தள்ள முடியாத செய்திகள். இதையெல்லாம், பார்க்கும் போது அவர்கள் சமூகத்தில் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் மணி கதறி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.