துணை பிரதமர் கனவு: முதல்வருக்கு பா.ஜ.க. தலைவர் பளீச் பதில்!

துணை பிரதமர் கனவு: முதல்வருக்கு பா.ஜ.க. தலைவர் பளீச் பதில்!

Share it if you like it

பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரமான பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமாக இருப்பவர் ஸ்டாலின். இவர், பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து நின்றால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என கூறியிருந்தார். அதனை, தி.மு.க.வின் பத்திரிகையான தினகரன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

இதற்கு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கொடுத்த பதிலடி இதோ ;

1967 – ஆம் ஆண்டு, தி.மு.க. முதன் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதன், சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சி.பி.எம். கட்சிகளுடன் அமைத்த கூட்டணியே காரணம். 2021 – ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.

1967-லிருந்து, தி.மு.க. ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு ஸ்டாலின் அவர்களே.

யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் ஸ்டாலின். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையில், பா.ஜ.க. 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். தமிழக பா.ஜ.க. கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் ஸ்டாலின். கூட்டணி இல்லாமல் போட்டியிட தி.மு.க. தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it