தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எடுத்த முயற்சியின் பயனாக தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை அரசு.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நான்கு நாட்கள் பயணமாக அண்மையில் இலங்கை சென்று இருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் அவர் சென்று இருந்தார். இதையடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர் கலந்து கொண்டார். அந்த வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் பொழுது அண்ணாமலை கூறியதாவது; இலங்கை வாழ் தமிழர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இதுதவிர, பல்வேறு நன்மைகளை செய்ய இந்தியா எப்பொழுதும் தயாராக இருப்பதாக உறுதி மொழி அளித்து இருந்தார்.
இதையடுத்து, எதிர்பாரத விதமாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மட்டுமில்லாமல் உங்களை விடுதலை செய்வதற்கான பணியை இந்தியா திரும்பிய உடன் மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்து இருந்தார். இதுதவிர, அவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தமிழக பா.ஜ.க செய்யும் என நம்பிக்கை அளித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மீனவர்கள் குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு இதோ.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த 12 தமிழ் மீனவர்களும் இலங்கை அரசால் இன்று விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களை சந்திக்கும் போது உறுதி அளித்தோம் இன்று அது நடந்திருக்கிறது. அவர்கள் தமிழகம் வந்தடையும் போது உற்சாகமாக வரவேற்பதற்கு தமிழக பா.ஜ.க தயாராக இருக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன் மற்றும் எல்.முருகனுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இதுதவிர, தமிழக மீனவர்களை மீட்க பெரும் உதவியாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டைமானுக்கு பா.ஜ.க சார்பில் நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான ‘சேவா இன்டர்நேஷனல்’ சார்பில் மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் ஹெச்.எஸ்.எஸ். எனும் ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் என்கிற பெயரில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உலக நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்க ‘அகண்ட தமிழ் உலகம்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின், மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இலங்கை மக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Great job annamalai ji🌷🌷🌷