வி.சி.க கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகை சர்மீளா மீது தேனி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.
வி.சி.க கட்சியின் மூத்த தலைவரும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எஸ்.எஸ். பாலாஜி. இவரின், மனைவியும் சின்னத்திரை நடிகையுமான டாக்டர். ஷர்மிளா பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்து உண்மைக்கு புறம்பாக தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட கூடியவர். பிரபல இணையதள ஊடகமான கதிர் நியூஸ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் என ’தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய கருத்து கணிப்பின் முடிவை வெளியிட்டு இருந்தது.
கதிர் நியூஸ் கருத்தை திரித்து விஷமிகள் சிலர் பொய் செய்தியை பரப்பி இருந்தனர். இதனை, மேற்கொள்காட்டி இவன் நல்லா சோக்கா சுத்துறதுக்கு நாம உழைச்சு வரி கட்டுறோம் என்று தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். நடிகை ஷர்மிளா உண்மையை அறிந்து கருத்து தெரிவிக்க வேண்டும் என கதிர் நியூஸ் பதிலடி கொடுத்து இருந்தது. கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கருத்து வேறுபாடு என ஆயிரம் இருக்கலாம். நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள பாரதப் பிரதமரை ஒருமையில் அழைத்தது கடும் கண்டனத்திற்குறியது என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். தி.மு.க.வின் மூன்றாம் தர பேச்சாளர் போலவும், கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் போன்று உண்மைக்கு புறம்பாக நடிகை சர்மிளா பேச கூடாது என நெட்டிசன்கள் அந்நாட்களில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றி வழக்கம் போல பொய் செய்தியினை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, தேனியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் டி.வி நடிகை மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த, செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளன. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க என்றால் உடனே குரல் கொடுக்கும் இதே சர்மிளா, தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவரும், பிரபல நடிகையுமான காயத்திரி ரகுராமை தி.மு.க நிர்வாகி ஜெயசந்திரன் என்பவன் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்த பொழுது சக நடிகைக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக இன்று வரை இவர் வாய் திறக்கவில்லை என்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.