துரைசாமி – காந்தி விவகாரத்தில் நடந்தது என்ன? உண்மை வீடியோ வெளியீடு!

துரைசாமி – காந்தி விவகாரத்தில் நடந்தது என்ன? உண்மை வீடியோ வெளியீடு!

Share it if you like it

உண்மையில் துரைசாமியின் கையை எம்.எல்.ஏ. காந்தி தட்டி விடவில்லை என்பது முழு வீடியோ மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

தமிழக தி.மு.க. அரசின் பட்ஜெட்டை கண்டித்து, பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டம் நல்ல வெயில் நேரத்தில் நடந்து கொண்டிருந்தது. அனைவருமே வியர்க்க விறுவிறுக்க நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, தனது தோளின் வலதுபுறம் ஏதோ ஊர்வதுபோல உணர்கிறார் காந்தி. உடனே, தனது வலது தோள் பட்டையை தடவிப் பார்க்கிறார். இந்த சமயத்தில்தான், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எதேச்சையாக எம்.எல்.ஏ. காந்தியின் இடது தோளில் கையை வைக்கிறார். உடனே, தனது சட்டையில் ஏதோ பூச்சிதான் வந்து அமர்கிறது என்று கருதிய எம்.எல்.ஏ. காந்தி, அதை தட்டிவிடுகிறார்.

பின்னர், திரும்பிப் பார்த்தால் அது வி.பி.துரைசாமியின் கை என்பது தெரியவிருகிறது. உடனே, துரைசாமியின் கையைப் பற்றிக் கொண்டு வருத்தம் தெரிவிக்கும் காந்தி, தான் ஏதோ பூச்சி என்று நினைத்து தட்டிவிட்டதாகக் கூறுகிறார். நடந்து விஷயம் இதுதான். ஆனால், மீடியாக்களும், சமூக வலைத்தள போலி போராளிகளும் முழு வீடியோவை எடிட் செய்துவிட்டு, காந்தி தட்டி விடுவதை மட்டும் கத்தரித்து ஒட்டி, தீண்டாமை ரேஞ்சுக்கு பில்டப் செய்து விட்டார்கள். எனினும், நடந்த உண்மை துரைசாமிக்கு தெரிந்ததால், அவரும் ஏதோ பூச்சி என்று தட்டி விட்டதாகக் கூறினார். ஆனால், இதையும் ஏற்க மறுத்த திராவிட கும்பல், ஏதோ துரைசாமி அடிமையாக இருப்பதுபோல சித்தரித்தார்கள்.

இந்த நிலையில்தான், துரைசாமியின் கையை காந்தி தட்டிவிட்ட பிறகு என்ன நடந்தது என்பது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், துணைத் தலைவர் துரைசாமியின் கையை தட்டிவிட்ட எம்.எல்.ஏ. காந்தி, பின்னால் திரும்பிப் பார்ப்பதும், அது துரைசாமி எனத் தெரிந்ததும் வருத்தம் தெரிவித்ததும் பக்காவாக பதிவாகி இருக்கிறது. மேலும், இதுதான் சந்தர்ப்பம் என்று கருதிய தி.மு.க.வினர், இப்படி அவமானப்பட்டு அங்கு இருக்க வேண்டுமா? தி.மு.க.வுக்கு திரும்பி வாருங்கள் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, திராவிடக் கொத்தடிமைகள்தான், ஏதோ தீண்டாமை நடந்து விட்டதுபோல வி.பி.துரைசாமியை தட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் பா.ஜ.க.வினர்.

ஆர்ப்பாட்ட வீடியோவின் காட்சிகளுக்கான லிங்க் இதோ…

https://m.facebook.com/story.php?story_fbid=2150765718410629&id=100004316645493


Share it if you like it