அம்பேத்கருக்கு நிகர் பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் என்று இசைஞானி இளையராஜா கூறியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த புத்தகமானது ஒரு சீர்திருத்தவாதியாக அம்பேத்கர் மற்றும் மோடியின் பங்களிப்பை ஒப்பிட்டுப் பேசுகிறது. இப்புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார். “அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல, அவரது கருத்தை அமல்படுத்துபவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும், சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் இசைஞானியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை #என்றும்_ராஜா_இளையராஜா என்னும் ஹேஷ் டேக்கை வெளியிட்டு தனது நன்றியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.