ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசிற்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த பின்பு, ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஹிந்து ஆலயங்களை இடிக்கும் காணொளிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இன்று வரை வைரலாகி வருகிறது. இதுவரை, 100-க்கும் அதிகமான கோவில்கள் தமிழகத்தில் இடிக்கப்பட்டுள்ளதாக, பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் தெய்வங்கள், தி.மு.க ஆட்சியில் நிந்திக்கும் நிகழ்வுகளும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் தில்லை நடராஜர் குறித்து தி.மு.க ஆதரவு யூடியூப்பான யூ2புரூட்டஸ் சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தது. யூ2புரூட்டஸ் சேனலை தடை செய்ய வேண்டும், அவதூறு பரப்பிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் காவல்துறையில் புகார்கள் குவிந்தன. இழிவாக விமர்சனம் செய்தவர் ஆளும் கட்சியின் ஆதரவாளர் என்பதால் சட்டம் தன் கடமையை செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், தருமபுர ஆதீனத்தின் சார்பில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/reel/2138023326359207
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் மிகப்பழமையான சைவ ஆதீனமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஆதீனத்தின் 27- வது ஆதீனகர்த்தராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்தவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். குரு ஸ்தானத்தில் இருக்கும் இவரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமப்பது பட்டின பிரவேசமாகும். இந்நிகழ்ச்சி கடந்த 500ஆண்டு காலமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு, திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தி.மு.க அரசின் தூண்டுதல் பெயரிலேயே தடை விதிக்கப்படுள்ளதாக பொதுமக்கள் உட்பட ஆன்மீக பெரியவர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டினப்பிரவேசம் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது.
எனது உயிரைக் கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன் எனது குருவிற்கு நானே பல்லக்கு சுமப்பேன் என்று மதுரை ஆதீனம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்ககது. .