தெலங்கானாவின் காமாரெட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும், தெலங்கானாவின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியையும், பாஜக வேட்பாளர் வெங்கடரமணா ரெட்டி தோற்கடித்தார்.
காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியுடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவ் போட்டியிட்டார். அதேபோல கோடங்கல் தொகுதியில் களமிறங்கிய ரேவந்த் ரெட்டியும், கேசிஆர் உடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
இதனையடுத்து காமரெட்டி தொகுதி விஜபி அந்தஸ்து பெற்றது. அனைத்து கட்சிகளின் கவனமும் அங்கு திரும்பியது. கேசிஆர் அல்லது ரேமந்த் ரெட்டி இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ரேவந்த் ரெட்டியை மூன்றாவது இடத்திற்கும், தெலங்கானா முதலமைச்சர் கேசிஆரை இரண்டாவது இடத்திற்கும் தள்ளிவிட்டு பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி வெற்றி பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன.
முதல்வராக பதவி ஏற்க உள்ள ரேவந்த் ரெட்டிக்கு 3-ம் இடம் கிடைத்தது. ஆதலால் 2 முதல்வர் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்தார் பாஜக வேட்பாளர் வெங்கடரமணா ரெட்டி என அத்தொகுதியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.