பா.ஜ.க எம்.எல்.ஏ வேட்பாளர் காலில் விழுந்த பாரதப் பிரதமர் மோடி-  வைரலாகும் காணொளி..!

பா.ஜ.க எம்.எல்.ஏ வேட்பாளர் காலில் விழுந்த பாரதப் பிரதமர் மோடி- வைரலாகும் காணொளி..!

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா. அக்கட்சி ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, உரையாற்றி கொண்டு இருந்தார். அப்பொழுது தி.மு.க தொண்டர் ஒருவர், அண்ணன் ராசா வாழ்க என்று கோஷம் எழுப்பியதற்கு. யாருடா அது அந்த நாயை தூக்கி வெளியே போடு என்று மிகவும் கீழ்த்தரமாக, விமர்சனம் செய்ததை தி.மு.க தொண்டர்கள்  யாரும் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.

ஸ்டாலின் போட்டு இருக்கும் செருப்பு, ஒரு ரூபாய் உன்னை விட அதிகம். நீ அவருக்கு சமம் ஆக முடியுமா என்று அண்மையில் தமிழக முதல்வரை ஆ. ராசா விமர்சனம் செய்ததற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏழை குடும்பத்தில் பிறந்து, வறுமையில் போராடி, இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்புக்கு (பிரதமர் பதவி) யாரும் வர முடியும் என்பதற்கு நம் கண் முன் சான்றாக நிற்பவர் மோடி என்பதில், யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. என்பதை பல வல்லரசு நாடுகளே இன்று வரை, அவரை புகழ்ந்து வருவதன் மூலம் பலரும் அறிந்து கொள்ள முடியும்.

தனது கட்சியை சேர்ந்த வேட்பாளர் தனது காலில் விழுந்த பொழுது பதிலுக்கு தானும் அவ்வாறே செய்து உள்ளார் பிரதமர். தனது கட்சி வேட்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், உரிய மரியாதை பிரதமர் வழங்கி வருகிறார்.

இன்றும் அவர் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை., அவர் என்றும் ஒரு எளிமையான மனிதர் என்பதை பார்த்தாவது. ஆ. ராசா போன்ற தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர்கள். தாங்கள் தான் எல்லாம் என்று ஆணவத்தில் ஆடாமல்., தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it