உதயநிதி எல்லாம் செனட் மெம்பர்: கெட்ட காலம்… அண்ணாமலை ‘பொளேர்’!

உதயநிதி எல்லாம் செனட் மெம்பர்: கெட்ட காலம்… அண்ணாமலை ‘பொளேர்’!

Share it if you like it

உதயநிதி எல்லாம் செனட் மெம்பர் என்பது கெட்ட காலம் என்று அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, உதயநிதியைப் பற்றி நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “உதயநிதியை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரோட படிப்பு என்ன, தகுதி என்ன? எங்க போயி என்ன கஷ்டப்பட்டாரு. அவரு திறமைக்கு மக்கள் ஓட்டுப்போட்டார்களா? சேப்பாக்கம் தொகுதி என்பது தி.மு.க.வில் யார் நின்றாலும் வெற்றிபெறும் தொகுதி.

உதயநிதிக்கு நீட் தேர்வில் உள்ள ஒரு ஃபார்முலாவை சால்வ் பண்ணத் தெரியுமா? டிரிக்னாமென்டரி, ஜாமென்டரி பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா? இவரெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் செனட் மெம்பர். அய்யோ கெட்டகாலம். அந்தக் காலத்தில் வல்லுனர்கள்தான் கருத்துச் சொல்வார்கள். அவர்கள் எல்லாம் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள். இப்போது யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லும் அளவுக்கு போய் விட்டது” என்று உதயநிதி ஸ்டாலினை காய்ச்சி எடுத்திருக்கிறார் அண்ணாமலை.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it