நாஞ்சில் சம்பத்திற்கு மரண பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்!

நாஞ்சில் சம்பத்திற்கு மரண பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்!

Share it if you like it

தி.மு.க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திற்கு பா.ஜ.க மூத்த தலைவர் பதிலடி கொடுத்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படுபவர் நாஞ்சில் சம்பத். தமிழக முதல்வர் ஸ்டாலினிடமிருந்து சமீபத்தில் அண்ணா விருது பெற்றவர். இவர், தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ய கூடியவர். இதுதவிர, மாற்று கட்சியை சேர்ந்தவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட திராவிட கொள்கை படி ஆபாசமாக பேசும் நபர். இவரின், பேச்சு பலரின் முகம் சுளிக்கும் வகையில் இருக்கும் என்பது பலரும் அறிந்த உண்மை. அந்த வகையில், தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனை ’அவள்’ என ஒருமையில் பேசி இருந்தார். ஆபாச பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.

இதனிடையே, பிரபல இணையதள ஊடகமான சாணக்கியாவிற்கு சமீபத்தில் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்து இருந்தார். இதில், நெறியாளர் பாண்டே எழுப்பிய பல கிடுக்கு பிடியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஆபாச பேச்சாளர் திணறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நியூஸ் 18 என்கிற பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தமிழ்நாட்டுக்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா? என்கிற தலைப்பில் மக்கள் சபை நிகழ்ச்சியை சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையிலுள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடத்தியது. இதில், திராவிட மாடல் என்கிற தலைப்பில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. எழிலன், கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பேசினர். அதேபோல, தேசிய மாடல் என்கிற தலைப்பில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் இரா.ஸ்ரீநிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், திராவிட மாடலை புகழ்ந்தும் மத்திய அரசு மற்றும் பாரதப் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து நாஞ்சில் சம்பத் பேசியிருந்தார். இதையடுத்து, பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிவாசன் தி.மு.க ஆதரவாளருக்கு மரண பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it