இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக இஸ்ரேலுக்கு இந்தியா, கனடா, ஜெர்மனி,அமெரிக்கா என மற்ற நாடுகள் எல்லாம் ஆதரவு தெரிவித்து உதவி செய்து வருகிறது.
இந்தியாவும் சில நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாக சோனியா காந்தி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தை கட்சிகளும் ஹமாஸ் பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு போன் செய்து அங்குள்ள நிலவரத்தை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், இஸ்ரேல் பிரதமருக்கு (நெதன்யாஹு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
அவரது தொலைபேசி அழைப்பு மற்றும் தற்போதைய நிலைமை குறித்த புதுப்பிப்பை வழங்குவதற்காக. இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.