இந்திய ராணுவ வீரர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்று பா.ஜ.க. தொண்டர்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் புத்தக வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., கலந்து கொண்டு பேசும் போது, “தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என்று தெரிவித்து இருந்தார். இவரின், பிரிவினை கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. வி.சி.க. எம்.பி.யின் பிரிவினை கருத்திற்கு, மேகாலயாவில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த குருமூர்த்தி காணொளி வாயிலாக தனது கடும் கண்டனத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார் ;
தமிழகத்தில், தனியா நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? உன்னால், ஒரு வார்ட்டினை சொந்தமாக மாற்ற முடியுமா? ஒரு நாடு மாதிரி தமிழகத்தை சொந்தமாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். தனி தமிழ்நாடு வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதற்குதான், நாங்கள் இந்திய ஒருமை பாட்டையும், தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்தோமா. நாட்டை இரண்டாகவும், மூன்றாகவும் பிளக்க தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கதான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறோமே? தவிர நாட்டை பிரித்து பார்க்க அல்ல. உன் சுயநலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பாய்.
அதன்பிறகு, மாவட்டத்தை பிரித்து கொடு என்று கேட்பாய். என்ன தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும். உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்த ஆட்சியாளரின் தவறு. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீங்களா? நாட்டு பற்றை வளர்க்க போராடி கொண்டு இருக்கும் நாங்கள் என்ன இழிச்சவாயன்களா? நீ ஆம்பளையா இருந்தா ஒரு நாள் வீதியில் நின்று தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடி பாரு உன் வாயாலேயே வந்த மாதரம் என்று சொல்ல வைப்போம் என்று தெரிவித்து இருந்தார்.
சி.ஆர்.பி.எப்.வீரர் குருமூர்த்தியின் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருந்தது. இதனால், உஷ்ணமான வி.சி.க. குண்டர்கள் சி.ஆர்.பி.எப். வீரரை போனில் தொடர்புகொண்டு மிக கடுமையாக மிரட்டினர். இச்சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ராணுவ வீரரை போனில் தொடர்பு கொண்டு உங்கள் குடும்பத்திற்கு எனது கட்சி தொண்டர்கள் பக்க பலமாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளித்தார்.
பா.ஜ.க. தலைவரின் உறுதிமொழியை மெய்ப்பிக்கும் வகையில், அம்மாவட்ட பா.ஜ.க. தலைவர் தமது தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் குருமூர்த்தியின் இல்லத்திற்கு நேரில் சென்று தங்களது முழு ஆதரவினை வழங்கினர். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.