பா..ஜ.க இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமுமுக காவல்துறையில் புகார்..
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர்களின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. பிபின் ராவத்தின் மறைவை அடுத்து தேச விரோத சக்திகள், அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள் என பலர் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை கண்டிக்கும் விதமாக பா.ஜ.க இளைஞரணி செயலாளர் வீர திருநாவுக்கரசு அடிப்படைவாதிகளுக்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தமுமுகவினர் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் திருநாவுக்கரசு அவதித்து விட்டதாகவும் உடனே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் மனு அளித்து உள்ளனர். மேலும் அவர் பணிபுரிந்து வரும் பல்கலைக்கழகத்தில் இருந்து உடனே அவரை நீக்க வேண்டும் என்று தமுமுக-வினர் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாத தமுமுகவினர் வீர திருநாவுக்கரசை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கலாம் என நினைத்தால் அவர்களின் கனவு பகல் கனவாகவே அமையும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். .