சமீபத்தில் கொடிக்கம்பம் விவகாரத்தில் பாஜக பிரமுகர் காவல் துறையினரால் தாக்கப்பட்டார். அதன்பிறகு ஜனாதிபதி தமிழ்நாடு வருகின்ற சமயத்தில் ஆளுநர் மாளிகையில் ரவுடி கருக்கா வினோத் என்பவன் பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டான். பிறகு திமுக நிர்வாகிகளால் ஜாமீன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பாஜகவினர் ஆளுங்கட்சியால் தாக்கப்படுவதை நிறுத்த பாஜக மேலிடம் ஒரு நால்வர் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வைத்தது. இந்நிலையில்
எதேச்சதிகார திமுக அரசினால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்படும் தமிழக பாஜகவினரின் நிலையும், தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் ஆய்வு செய்து, அதன் உண்மை நிலையை உலகத்தின் முன் வைப்பதற்காக மத்திய பாஜகவால் அமைக்கப்பட்ட நால்வர் குழு, முதற்கட்டமாக தங்கள் விசாரணை மற்றும் ஆய்வுகளை ஒரு அறிக்கையாக தமிழக ஆளுநரிடம் வழங்கியது.

பாஜகவினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதையும், திமுகவின் அத்துமீறல்களை ஆய்வு செய்து அறிக்கை !
Share it if you like it
Share it if you like it