ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர் குறிப்பாக பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என முதலில் தெரிவித்த தலிபான்கள் பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்தனர். கல்வி நிலையங்களை ஆண்களுக்கு மட்டும் திறந்துவிட்டு பெண்கள் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. உயர்கல்விக் கூடங்களில் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பறையும், இருதரப்பும் பார்க்காத வகையில் திரையிட்டு பாடம் நடத்துகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக ஆக முடியாது அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்
இவற்றுக்கெல்லாம் மேலாக ஆண்கள் தாடி மழிக்க கூட தடைவிதித்தது தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறை. இப்படி பல கொடுமைகளை அரங்கேற்றிவரும் இவர்களால் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த தலிபான்கள் ஆட்சி மீண்டும் வருமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு கொடுமையாக ஆப்கன் படையை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒரு நபரின் குழந்தையை தலிபான்கள் கொன்றுள்ளனர் என பஞ்சஷிர் அப்சர்வர் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பலஸ்தீன், சிரியா போன்ற நாடுகளில் பிரச்சணைகள் எழுந்தபொழுது, உள்நாட்டு போராளிகள் சிலர் தங்களின் எல்லை தாண்டிய மாத விசுவாசத்தை காட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து மக்களை குழப்பியவர்கள் இப்பொழுது மௌனம் காப்பது ஏன் என பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.