அமீர்கானை தொடர்ந்து ஷாருக்கானும் சரண்டர்: வைஷ்ணோ தேவி கோயிலில் சுவாமி தரிசனம்!

அமீர்கானை தொடர்ந்து ஷாருக்கானும் சரண்டர்: வைஷ்ணோ தேவி கோயிலில் சுவாமி தரிசனம்!

Share it if you like it

பாலிவுட் நடிகர் அமீர்கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கானும் ஹிந்துக்களிடம் சரண்டர் ஆகி இருக்கிறார். ஜம்மு காஷ்மீரிலுள்ள வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.

பாலிவுட் படங்களில் ஹிந்துக்களையும், ஹிந்து சாமியார்களையும், ஹிந்து மத சடங்குகளையும், ஹிந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் என முன்னணி பாலிவுட் ஹீரோக்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹிந்துக்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, கடந்த 2 வருடங்களாக ஹிந்துக்களின் எழுச்சி வியக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. பாலிவுட் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் பாய்காட் பாலிவுட் என்றும், குறிப்பிட்ட அந்த நடிகரின் பெயரையும், படத்தின் பெயரையும் குறிப்பிட்டு பாய்காட் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பிரபர பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் வெளியானது. இப்படம் ஹாலிவுட்டில் ஹிட்டடித்த தி ஃபாரஸ்ட் கம்ப் என்கிற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். ஆனால், இப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது முதலே பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா என்கிற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டாக்கி வந்தனர் ஹிந்துக்கள். இதனால் மனமுடைந்த அமீர்கான், தான் ஹிந்துக்கள் மனம் புண்படும்படி ஏற்கெனவே பேசிய பேச்சுக்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்பதுபோல, தானும் தேசப்பற்று மிக்கவன்தான் என்றும், தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஹிந்துக்களிடம் மன்றாடினார். எனினும், ஹிந்துக்களின் எதிர்ப்பால் இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது.

இதையடுத்து, திரைப்படங்களில் நடிப்பதை தற்காலிகமாக மூட்டை கட்டி வைப்பதாக அறிவித்த அமீர்கான், சமீபத்தில் அமீர்கான் புரொடக்ஷன்ஸ் என்கிற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த அலுவலக திறப்புவிழாவில் ஹிந்து முறைப்படி கலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை தானே செய்தார் அமீர்கான். அதாவது, தான் ஹிந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்பதை காட்டும் வகையில் இந்த பூஜையை செய்திருக்கிறார். இந்த பூஜையில் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவும் கலந்துகொண்டார். இந்த பூஜையின் போது கணவன், மனைவி இருவரும் இணைந்து ஆரத்தி காட்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த பூஜை தொடர்பான போட்டோக்களை லால் சிங் சத்தா திரைப்படத்தின் இயக்குனர் அத்வைத் சந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், மற்றொரு பாலிவுட் ஹீரோ ஷாருக்கான், ஜம்மு காஷ்மீரிலுள்ள வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை என்கிறார்கள் விஷயமறிந்த திரைத்துறையினர். அதாவது, ஷாருக்கான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் பதான். கிட்டத்தட்ட 5 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு பதான் திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஷாருக்கான் பிறந்தநாளன்று ரிலீஸானது. மேலும், துன்கி, ஜவான் ஆகிய படங்களிலும் ஷாருக்கான் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, ஹிந்துக்களின் வழக்கமான பாய்காட் பாலிவுட், பாய்காட் ஷாருக்கான், பாய்காட் பதான் என்பன போன்ற ஹேஷ்டேக்குகளால் படம் தோல்வியைச் சந்தித்துவிடுமோ என்கிற பீதியில் ஷாருக்கான் இருக்கிறாராம். இதன் காரணமாகவே, சமீபத்தில் மெக்காவுக்குச் சென்று உம்ரா செய்து விட்டு வந்தார். தற்போது வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

எது எப்படியோ பாலிவுட் நடிகர்களின் ஹிந்து மத துவேசம் மாறினால் சரிதான்!


Share it if you like it