தமிழர்கள் இந்தியர்களா இல்லையா?

தமிழர்கள் இந்தியர்களா இல்லையா?

Share it if you like it

‘சங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்’ என்கிற நூல் விமர்சனம்.

தமிழர்கள் இந்தியர்களா இல்லையா? துள்ளியமாகவும், தெளிவாகவும் விளக்கி இருக்கிறது ‘சங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்’ என்கிற நூல். சங்க கால தமிழ் புலவர்கள் இயற்றிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, ஐம்பெரும் காப்பியங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தமிழர்கள் இந்தியர்கள்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி இருக்கிறார் நூலின் ஆசிரியர். தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று திராவிட இயக்கத்தினரால் கூறப்பட்டு வரும் நிலையில், தமிழர்கள் இந்தியர்கள்தான் என்பதை இந்நூல் நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே, தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இந்நூலை படித்தால், கூடுதல் தெளிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், ஹிந்து மதத்தின் ஆழத்தையும், தமிழ் புலவர்களின் தெய்வ நம்பிக்கையையும் தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய முக்கியமான நூல்.

மேலும், தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று சொல்வதைப் போல, அந்தணர்கள் (ஆரியர்கள்) கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அதேபோல, அந்தணர்களின் வருகைக்குப் பிறகே விநாயகர் வழிபாடு வந்தது. முருகன் தமிழ் கடவுளே இல்லை. குறிஞ்சி நிலத் தலைவன். அப்படிப்பட்ட முருகனை தமிழ்க் கடவுள் என்று சொல்லி ஏமாற்றி வருகின்றனர் என்றும் தமிழர்களை திசை திருப்பி வருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் சங்க இலங்கியங்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர்.

இந்நூல் விஷ்ணு சர்மா என்பவரின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கிறது. சந்தம் தேசிய இலக்கியப் பேரவை இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இந்நூலுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அணிந்துரை எழுதி இருக்கிறார். இந்நூல் 13 உட் தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது. இதன் முதல் பதிப்பு மார்ச் 2020-ம் ஆண்டு வெளியானது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த ஸ்ரீகருடா பிரசுரம் இந்நூலின் காப்புரிமையைப் பெற்றிருக்கிறது. இப்புத்தகத்தின் பிரதி வேண்டுவோர் நூலின் ஆசிரியரான விஷ்ணு சர்மாவை 9087410869 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Share it if you like it