கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) இரவு அன்று, வங்கதேசத்தின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள அல்ஃபதங்கா உபாசிலா அருகே மூன்று இந்துக் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஹிந்து தெய்வச் சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து தரைமட்டமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேதப்படுத்தப்பட்ட மூன்று கோவில்கள் கேந்திரிய ஹரி கோவில், ஸ்ரீ ஸ்ரீ விஷ்ணு பாகல் கோவில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ தாமோதர் அகாரா கோவில் என அடையாளம் காணப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் அல்ஃபதங்கா நகராட்சியிலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேந்திரிய ஹரி கோவிலில் நான்கு தேவி மானசா சிலைகளும், துர்கா, லட்சுமி, சரஸ்வதி மற்றும் ஒரு சிவன் சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதேபோல், ஸ்ரீ ஸ்ரீ விஷ்ணு பாகல் கோவிலில் இருந்த இரண்டு சிவன் மற்றும் மானசா தேவி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீ ஸ்ரீ தாமோதர் அகாராவில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் மற்றும் சிவன் மற்றும் நாராயணரின் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான தகவலை, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு (அல்ஃபதங்கா) காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி சலீம் ரேசா, தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக குற்றம் நடந்த இடத்திற்கு வந்ததாக கூறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் (HBCUC) உறுப்பினர்கள் சிலை சேதத்தில் ஈடுபட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி அல்ஃபதங்கா சௌராஸ்ட்ராவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத அடக்குமுறைக்கு எதிராக நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
source : opindia