பாஜக மூத்த தலைவரும் ஜார்கிராம் மக்களவை தொகுதி வேட்பாளருமான பிரனாத் துடு, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கார்பேட்டா பகுதியில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பிரனாத் துடுவின் காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர், இதனை தொடர்ந்து அவரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக பாதுகாத்து அழைத்துச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்கள் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக வாக்குச் சாவடிகளுக்குள் பாஜக முகவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் எழுந்ததை அடுத்து, பிரனாத் துடு கார்பேட்டாவுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.
இதுதொடர்பாக பிரனாத் துடு கூறியதாவது :-
“திடீரென, சாலைகளை மறித்த டிஎம்சி குண்டர்கள் என் கார் மீது செங்கற்களை வீசத் தொடங்கினர். எனது பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட முயன்றபோது, அவர்கள் காயமடைந்தனர். என்னுடன் வந்த இரண்டு CISF ஜவான்கள் தலையில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர் என்று பிரனாத் துடு கூறினார்.