2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் எதிரொலியாக சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நகை வாங்க மக்கள் நகை கடைக்கு படையெடுத்து வருகின்றனர்.