தென் மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, மாற்றாக கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிளாம்பாக்க பேருந்து நிலையத்தில் தென் மாவட்டத்திற்கு செல்ல போதிய அளவு பேருந்து இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் நள்ளிரவில் திடீரென பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பௌர்ணமி, ஆடி மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட விசேஷ நாட்களை முன்னிட்டு பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் மற்ற ஊர்களுக்கு பேருந்து போதிய அளவில் இல்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களிடம் செய்தியாளர்கள், ஒரு பெண்மணி இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை பேருந்து இல்லாததால் ஆத்திரமடைந்து பேருந்து நிலையத்திலே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அமைச்சர் சிவசங்கர், அந்த பெண்மணியுடன் சேர்ந்து எத்தனை பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று கேட்டதற்கு, 50 பேர் என்று செய்தியாளர் கூறினார். 50 பேர் எல்லாம் இல்லை குறைவான நபர்கள், மதுபோதையில் இரண்டு பேர் போராட்டம் நடத்த கூறியதாக அமைச்சர் சிவசங்கர் வாய்கூசாமல் பொய் கூறினார்.
பாலிமர் செய்தி ஊடகம் கிளம்பாக்கத்தில் போதிய பேருந்து இல்லாததால் பயணிகள் கிடைத்த பேருந்தில் முண்டியடித்து ஏறினர். இதனால் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் பேருந்து வளாகத்திலேயே படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டதாக காணொளி ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த காணொளியை பார்த்தால் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து கிடைக்காமல் போக்குவரத்து கழக ஊழியர்களிடம் பயணிகள் சண்டை போடுகின்றனர். அதில் பெண்கள் கூறுகையில், எல்லா பஸ்ஸும் புல்லா வந்தா நாங்க எப்படி ஏறுறது ? என்று ஆதங்கமாக பேசினார்.
இப்படி இருக்கையில் அமைச்சர் சிவசங்கர் மக்கள் போராட்டமே நடத்தவில்லை என்று வாய் கூசாமல் பொய் பேசுகிறார். மக்களின் அடிப்படை தேவையான பேருந்து வசதியை ஏற்படுத்தி தர முடியவில்லை. எதற்காக இவர்கள் எல்லாம் அமைச்சராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுக அமைச்சர் சிவசங்கரை வசைபாடி வருகின்றனர்.