CAA போராட்டத்தால் சேதாரம் அடைந்த பொதுசொத்துக்கு செய்கூலி வாங்கிய யோகி அரசு

CAA போராட்டத்தால் சேதாரம் அடைந்த பொதுசொத்துக்கு செய்கூலி வாங்கிய யோகி அரசு

Share it if you like it

CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலவரக்காரர்கள் பொது சொத்துக்களுக்கு பெருத்த சேதம் விளைவித்தனர். அவர்களில் 21 பேர் அடையாளம் காணப்பட்டு சேதப்படுத்திய பொருட்களுக்கான தொகையை திரும்ப செலுத்த உபி அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து சுமார் 85,856 ரூபாயை முதல் தவணையாக கலவரக்காரர்கள் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில், ஏராளமான பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன இதனால் உபி அரசிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. அவற்றை ஈடு செய்யும் விதத்தில் கலவரகாரர்களை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக இறங்கி சுமார் 21 பேரை கண்டுபிடித்து அவர்கள் சேதப்படுத்திய பொருட்களுக்கான தொகையை அபராதமாக விதித்தது உபி அரசு. அவ்வாறு நஷ்ட ஈடு கட்டாதவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாயும் என கூறிய உபி அரசு, பணத்தை வசூலிக்கும் முயற்சியில் கடுமையாக இறங்கியது. இதனால் கலக்கம் அடைந்த கலவரக்காரர்கள் 6 பேர் தங்களது முதல் தவணையாக இதுவரை சுமார் 80,856 ருபாயை திருப்பி அளித்துள்ளதாகவும் 2,00,000 ருபாய் நிலுவையில் உள்ளதாகவும் உபி அரசு தெரிவித்துள்ளது.


Share it if you like it