குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், நாடு முழுவதும் போராட்டங்கள் தலைதுக்கியது இதற்கு ‘கேள்வி – பதில்’ பாணியிலான விளக்க அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அப்பொழுது வெளியிட்டுள்ளது அதன் விவரம்:
* கே : சிஏஏ யாருக்கு பொருந்தும்?
ப : பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சிஏஏ பொருந்தும். இந்த 3 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட வேறு எந்த வெளிநாட்டினருக்கும் இது பொருந்தாது.
* கே : இந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சிஏஏ எவ்வாறு உதவுகிறது?
* ப : அவர்கள் அந்த நாடுகளில் மத ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் பாஸ்போர்ட், விசா போன்ற பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும், இந்தியக் குடியுரிமைக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும். சட்டரீதியான இந்த உரிமையை, அவர்களுக்கு சிஏஏ வழங்குகிறது. மேலும், அவர்கள் இந்தியக் குடிமக்களாக மாறுவதற்கான நடவடிக்கையை சிஏஏ ‘வேகப்படுத்துகிறது’. இவர்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தாலே, இந்த சட்டப்படி இந்தியக் குடியுரிமை பெற முடியும்; ஆனால், பிற வெளிநாட்டினர் 12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் தான் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
* கே : பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்தியக் குடியுரிமையை எந்த காலத்திலும் பெற முடியாதபடி சிஏஏ தடை விதிக்கிறதா?
* ப : இல்லை. அவர்கள் இந்தியக் குடியுரிமை சட்டத்தின் 6-வது பிரிவு அல்லது 5-வது பிரிவு மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும். இதற்கு சிஏஏ எந்த வகையிலும் தடை விதிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் கூட, இந்த 3 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்கும் இந்த இரு பிரிவுகள் மூலம் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் கூட, இந்தியா – வங்கதேசம் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தப்பட்ட பின், 14 ஆயிரத்து 864 வங்கதேசத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
எதிர்காலத்தில் எந்த ஒரு வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறுபவர்களும், அவர்களின் மதம் அல்லது எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது, தகுதி அடிப்படையில் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
* கே : இந்த 3 நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய முஸ்லிம்கள், சிஏஏ சட்டப்படி வெளியேற்றப்படுவார்களா?
* ப : இந்த சட்டத்துக்கும், இந்தியாவில் இருந்து எந்த ஒரு வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை, அவர்கள் எந்த நாடு அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை 1946-ம் ஆண்டில் வெளிநாட்டினர் சட்டம், 1920-ம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டம் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும்.
இந்த இரு சட்டங்கள் தான், அனைத்து வெளிநாட்டினரும் இந்தியாவுக்கு வருதல், தங்குதல், இந்தியப் பகுதிகளுக்குச் செல்லுதல், நாடு திரும்புதல் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் எந்த ஒரு வெளிநாட்டினரையும், இந்த இரு சட்டங்கள்படியான நடவடிக்கை மூலம் தான் வெளியேற்ற முடியும்.
ஒருவரை, ‘சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டு நபர்’ என்று தீர்மானிப்பதற்கு, உள்ளூர் போலீஸ் அல்லது நிர்வாக அதிகாரிகள் நடத்தும் சட்டப்படியான விசாரணை அடிப்படையிலான நீதித்துறை நடவடிக்கைகள் உள்ளன. மேலும், வெளியேற்றப்படும் அந்த நபரை அவரது நாட்டின் அதிகாரிகள் சரிவர வரவேற்று அழைத்துச் செல்வதை உறுதிசெய்வதற்காக, அவருக்கு அவரது நாட்டின் துாதரகம் முறைப்படியான பயண ஆவணம் வழங்குவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அசாமில், 1946- ம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டப்படி ஒருவர் வெளிநாட்டினர் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு தான், அவரை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்குகிறது. அதன்பிறகு தான், அவர் வெளியேற்றப்படுவார்.
எனவே, சட்டவிரோத வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் இயந்திரத்தனமோ, பாரபட்சமோ இல்லை. சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டறிதல், கைது செய்தல், வெளியேற்றுதல் ஆகிய மத்திய அரசின் அதிகாரங்கள், வெளிநாட்டினர் சட்டத்தின் 3-வது பிரிவு மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் 5-வது பிரிவு மூலம், மாநில அரசுகளுக்கும் அவர்களின் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
* கே : இந்த 3 நாடுகளைத் தவிர வேறு நாடுகளில் மத அடிப்படையில் பாதிக்கப்படும் இந்துக்கள், சிஏஏ அடிப்படையில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
* ப : முடியாது. அவர்கள், இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு, இந்தியக் குடியுரிமை சட்டப்படியான பிற வாய்ப்புகள் (6வது பிரிவு அல்லது 5வது பிரிவு) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சிஏஏ அமலாவதால், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை சட்டத்தில் முன்னுரிமை கிடைக்காது.
* கே : இனம், பாலினம், அரசியல் கட்சி அல்லது சமூகக் குழுவில் உறுப்பினராக இருத்தல், மொழி, பூர்வீகம் போன்றவற்றின் அடிப்படையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் வெளிநாட்டினர், சிஏஏ விதிமுறைகளின் கீழ் வருகின்றனரா?
* ப : இல்லை. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அண்டை நாடுகளிலும் ‘அரசு மதம்’ இருப்பதால்தான், அந்த நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மை மதத்தினரை மட்டுமே சிஏஏ உள்ளடக்கியிருக்கிறது.
எந்த ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவரும், அவருக்கு எந்த வகையிலான பாதிப்பாவது ஏற்பட்டால், இந்தியக் குடியுரிமை சட்டப்படியான குறைந்தபட்ச தகுதியை அவர் பூர்த்தி செய்தால், இந்தியக் குடியுரிமை கோரி அவரும் விண்ணப்பிக்கலாம்.
* கே : இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ படிப்படியாக நீக்கிவிடுமா?
* ப : இந்தியக் குடிமக்களுக்கு சிஏஏ பொருந்தாது. அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் இந்திய அரசியல் சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகள் உள்ளன. சிஏஏ–வின் நோக்கம், இந்தியக் குடிமக்களின் குடியுரிமையைப் பறிப்பது அல்ல; 3 அண்டை நாடுகளின் குறிப்பிட்ட சூழலால் பாதிக்கப்பட்டுள்ள, அந்த நாடுகளைச் சேர்ந்த 6-மத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதுதான் சிஏஏ–வின் நோக்கம்.
* கே : சிஏஏ–வைத் தொடர்ந்து என்ஆர்சி (தேசியக் குடிமக்கள் பதிவேடு) அமலாகிறது. இதனால், இந்தியாவில் குடியேறியவர்களில் முஸ்லிம்களைத் தவிர்த்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படுமா? முஸ்லிம்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்களா?
* ப : சிஏஏ–க்கும் என்ஆர்சி–க்கும் சம்பந்தமே இல்லை.
என்.ஆர்.சி தொடர்பான சட்ட விதிமுறைகள், 2004 டிசம்பரில் இருந்தே, இந்தியக் குடியுரிமை சட்டம்–1955ன் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. மேலும், இந்த சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த 2003ம் ஆண்டின் விதிகள் உள்ளன. அவை, இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்து, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடைமுறையைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த சட்ட விதிமுறைகள், சட்டப் புத்தகங்களில் கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இவற்றில் சிஏஏ எந்த வகையிலும் மாற்றம் செய்யவில்லை.
எந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கும் சிஏஏ நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாதது என்று மத்திய அரசு மிக உறுதியான வாக்குறுதியை வழங்கினாலும் சீமான், திருமா, சில்லறை போராளிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினையை தூண்டும் நபர்கள் பாரதப் பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களின் எதிரி என்பது போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயன்றனர். இதற்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா மேற்கூறிய போராளிகளுக்கு புரியும் வண்ணம் தக்க பதிலடியை தனது கார்ட்டூன் மூலம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We still helps innocent peoples of afgan at the same time we all should understand the the reason why we need CAA now. wakeup indians. #AfganistanWomen #AfganistanBurning #AfganistanCrisis #IndiaAfghanistan #CAA #cartoon #islamicnations #ModiGovt pic.twitter.com/x4OUtJpdEV
— Cartoonist Varma (@CartoonistVarma) August 22, 2021
CAA எதிர்ப்பு மனநோயாளிகளின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் பொய்யாக்கி இன்றும் ஆப்கன் மக்களுக்கு பாரதம் தான் அடைக்கலம் கொடுக்கிறது. அம்மக்கள் பாகிஸ்தானை தவிர எந்த நாட்டிற்கும் செல்ல தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
— Cartoonist Varma (@CartoonistVarma) August 22, 2021