Share it if you like it
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலிகர் முஸ்லீம் பல்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்பகுதியாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லீம் பல்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பாதுகாப்புக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் மாணவர்களின் போராட்டம் அதிகரித்துள்ளது. அலிகர் முஸ்லீம் பல்கலைகழகமானது ஜனவரி 5 ஆம் தேதி வரை மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Share it if you like it