கொடுத்து கொடுத்து  சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த் !

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த் !

Share it if you like it

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தனது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :- திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது திறமையான நடிப்பு லட்ச கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அதை நிரப்ப கடினமாக இருக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் செய்தியை குறிப்பிட்டுள்ளார். அதில், தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.

தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை!

விஜயகாந்த் – ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார்.

இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார்.

விஜயகாந்த் 1979ம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015ம் ஆண்டு வரை 150க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.

விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் “புரட்சி கலைஞர்’ என்னும் பட்டம் உண்டு.

🕷️பிறப்பு!

விஜயகாந்த், மதுரையில் கே.என்.அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி ஆகியோருக்கு மகனாக 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியில் பிறந்துள்ளார்.

நடிப்பு கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை கடந்து 1979ம் ஆண்டு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

1990ம் ஆண்டு ஜனவரி 31ல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சன்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களது இளைய மகன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

*🕷️திரையுலக தொடக்கம்!

நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார்.

இவர் 1979ல் அகல் விளக்கு என்ற படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் அதே ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை தூக்கி காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து ‘விஜயகாந்த்’ என தனது பெயரினை மாற்றி அமைத்துள்ளார்.

தொடக்கத்தில் இவர் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினாலும், பின்னர் நாயகனாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

இவரது முன்னணி நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடையாளத்தினை பெற்று தந்துள்ளது.

🕷️பிரபலம் / அங்கீகாரம்!

வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய இவர், நாயகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும்.

ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.

விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான திரைக்கதையிழும், தேசப்பற்று படங்களாகவும் இருக்கின்றது.

இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘புரட்சி கலைஞர்’ என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ‘கேப்டன்’ என்றே அழைக்கின்றனர்.

இவரது 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி – தமிழக அரசு திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கலைமாமணி விருது (2001), எம்.ஜி.ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அரசால் ‘சிறந்த குடிமகனுக்கான’ விருது அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

பல கோடிகள் கடனில் உள்ள தமிழ் திரைப்பட சங்கத்தினை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தியுள்ளார்.

🕷️அரசியல் பயணம்!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனது தேசப்பற்று வசனங்கள் மூலம் பிரபலமான இவர், அரசியலிலும் தனது பங்களிப்பினை கொடுத்துள்ளார்.

“தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்றுள்ளார்.

இவர் 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


Share it if you like it