திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவன் மற்றும் அவனது சகோதரி அரிவாளால் வெட்டப்பட்டனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதி அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் பொன்னாக்குடி, மாயனேரி, மருதகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடைவேளையின்போது பொன்னாக்குடி மற்றும் மாயனேரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சாதி பெயரை கூறி அடித்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த மோதலில், 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கையில் படுகாயமும், மற்றொரு மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து போக செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்த மோதலுக்கு தொடர்பே இல்லாத மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பொன்னாகுடியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த பிறகுதான் இவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என கூறப்படுகிறது.
பள்ளியில் படிக்கும்போதே சாதிவெறி பிடித்து அடிதடியில் இறங்கினால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் ? மக்களை வழிநடத்த வேண்டிய தமிழக அரசே பார்க்கும் இடமெல்லாம் டாஸ்மாக் வைத்து தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இதில் கள்ளச்சாராயம் வேறு.
முதல்வரின் மகனாகவும் ஒரு அமைச்சராக இருந்துகொண்டு பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று மேடையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசினால் மாணவர்களும் சாதி வெறி பிடித்துத்தான் அடித்து கொள்வார்கள். இனிமேலாவது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க கற்று கொள்ளுங்கள் உதயநிதி என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.