மோடி நமக்கு எதிரி: மதமாற்ற கும்பல் கதறல்!

மோடி நமக்கு எதிரி: மதமாற்ற கும்பல் கதறல்!

Share it if you like it

மோடி எங்கள் எதிரி என பாதிரியார் ஒருவர் ஆணவத்துடன் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத்தின் சார்பாக 52-வது ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தி.மு.க எம்.எல்.ஏ இனிக்கோ இருதய ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசுகையில், பொதுத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் நமக்கு ஒரே எதிரி பா.ஜ.க. தான். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள அத்தனை கட்சிகளும் சிந்தித்து ஒன்று சேர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அப்படி, செய்யவில்லை என்றால் நம் எதிரியை சந்திக்க முடியாது. தோற்கடிக்க முடியாது என்பதனை உறுதியாக நான் நம்புகிறேன். உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாயாவதி, முலாயம் சிங் போன்றவர்கள் ஒதுங்குவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. எப்படி தான் பேசினாலும், எப்படி தான் எகிறி குதித்தாலும் அவர்களை தோற்கடிக்க வீழ்த்த முடியாது என்ற தோற்றம் இருக்கிறது.

உங்கள் ஞானத்தால், உங்கள் அரசியல் வியூகத்தால் குறிப்பாக வட இந்திய அரசியல் தலைவர்களோடு நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது அது மம்தா பேனர்ஜியோ, உ.பியை சேர்ந்த தலைவராகவோ, ஆந்திராவை சேர்ந்தவராகவோ அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களோடு நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது நம் அனைவருக்கும் ஒரு எதிரி இருக்கிறான் என்பதை எடுத்து கூற வேண்டும் என அப்பாதிரியார் தி.மு.க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைப்பது போன்று இக்காணொளி அமைந்து உள்ளது.

பா.ஜ.க.விற்கு ஆதரவாகவோ, ஹிந்து மதத்திற்கு ஆதரவாகவோ மதுரை ஆதீனம் பேசினால் தி.க, வி.சி.க மற்றும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் மடாதிபதி அரசியல் பேசலாமா என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவ பாதிரியார்கள் மட்டும் அரசியல் பேசலாம். பாதிரியார்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் மடாதிபதிகளுக்கு மட்டும் இருக்க கூடாது என்பது என்ன டிசைன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it