காவிரி விவகாரத்தில் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிப்பதாக கூறி அக்டோபர் 16ல் பா.ஜ.க கும்பகோணத்தில் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரி நீர் திறக்கப்படவில்லை என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசுமுறை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசியல் லாபங்களுக்காக, நாடகமாடும் திமுக, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று,அக்டோபர் 16 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு, தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் காவிரியில் இருந்து திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.