கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலை வருவதற்கு. பா.ஜ.க அரசே மிக முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியுதா.
கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க அரசு ரத்து செய்து அதிரடி முடிவினை மேற்கொண்டது. ஜம்மு – காஷ்மீர், லடாக், என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. ‘ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் பொழுது மாநில அந்தஸ்து அளிக்கப்படும், எனவும் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதுடன், சட்டசபை தேர்தலை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த ஜூன்24 அன்று, காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி பத்து முறை ஆட்சிக்கு வந்ததாலும் காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்ட பிரிவை நீக்கவே முடியாது என்று தி.மு.க தலைவரின் நெருங்கிய நண்பர் ஃபாரூக் அப்துல்லா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.