மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் கலந்து கொள்ள அப்போதைய அரசு அனுமதி மறுத்த நிலையில் தற்போது மத்திய அரசு பணியாளர்கள் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் இந்த செயல்பாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் வரவேற்பு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் திரு.சுனில் அம்பேகர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 99 ஆண்டுகளாக தேச புனரமைப்பு மற்றும் சமுதாய சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, பன்முகத்தன்மை காப்பது மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சமுதாயத்துடன் சேர்ந்து சங்கம் செய்துள்ள சேவைகளை, தேசத்தின் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
தங்கள் சுயலாபத்திற்காக அப்போதைய அரசு, சங்கம் போன்ற அமைப்புகளில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்தது. மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை மிக பொருத்தமானது மற்றும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.