புதுச்சேரியில் நடைப்பெற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மத்திய செயலாக்க குழு கூட்டம் !

புதுச்சேரியில் நடைப்பெற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மத்திய செயலாக்க குழு கூட்டம் !

Share it if you like it

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மத்திய செயலாக்க குழு கூட்டம்(Central Working Committee) பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் விவேகானந்தா சிபிஎஸ்சி பள்ளி, புதுச்சேரியில் நடைபெற்றது.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்( ABVP ) நாடு முழுவதும் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இளம் வாக்காளர்களுக்காக வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையை நாடு முழுவதும் செய்ய இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் வித்யார்த்தி பரிஷத் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய பரப்புரைகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும், மேலும் கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவர என்ன செய்ய வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக சந்தேஷ்காளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் மேற்கு வங்க அரசாங்கத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கல்வித்துறையில் மாணவர்களின் நலன் சார்ந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்காக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் வகுப்புகளில் பரப்புரை செய்ய இருக்கிறது என்று ABVPயின் தேசியத் தலைவர் டாக்டர். ராஜ்ஸரன் ஸாஹி அவர்கள் கூறினார்.

ABVPயின் மத்திய செயலாக்க குழு கூட்டத்தில் கடந்த வருடம் நடைபெற்ற திட்டங்கள் மற்றும் வரக்கூடிய ஆண்டுகளில் ABVPயின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், இளைஞர் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்திடும்வகையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட உள்ளது என்று ABVP யின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர்.யாக்யவல்க்ய சுக்லா அவர்கள் கூறினார்.


Share it if you like it