பெண்களிடம் செயின் பறித்து சினிமா தயாரிப்பு; துணை நடிகர் சனாபுல்லா குடும்பத்தோடு சிறையில் அடைப்பு!

பெண்களிடம் செயின் பறித்து சினிமா தயாரிப்பு; துணை நடிகர் சனாபுல்லா குடும்பத்தோடு சிறையில் அடைப்பு!

Share it if you like it

பெண்களிடம் நகை பறித்து விற்று, அதில் கிடைத்த பணத்தில் சினிமா தயாரித்து வந்த துணை நடிகர் சனாபுல்லா குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீமாகக் கொண்டவர் பீருஷா மகன் சனாபுல்லா. இவர், தனது மனைவி ரஷியா, மகன் ஜாபர் ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள பச்சையங்கோட்டை காந்தி நகரில் வசித்து வருகிறார்கள். சனாபுல்லா ‘நான் அவன்தான்’ என்கிற பெயரில் திரைப்படம் எடுத்து வருவதோடு, அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்திருக்கிறார். இதற்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டிருக்கிறது. ஆகவே, சனாபுல்லாவும், அவரது மகனும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பெண்களிடம் செயினை பறித்து, அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து சினிமா தயாரித்திருக்கிறார்கள்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் பங்காளதெருவைச் சேர்ந்த பழனிசாமி மனைவி பூமாரி என்கிற முத்துமாரியிடம் 12 பவுன் செயினை பறித்திருக்கிறார்கள். அதாவது, , கடந்த மாதம் 15-ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்திருந்திருக்கிறார் முத்துமாரி. அப்போது, பைக்கில் வந்த சனாபுல்லாவும், அவரது மகன் ஜாபரும், முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் செயினை பறித்துச் சென்றனர். அதேபோல, கதிரேசன் கோவிலைச் சேர்ந்த வெள்ளாத்தாய் என்பவர், கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டார் சாலையில் நடந்து சென்றிருக்கிறார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினையும் பறித்துக் கொண்டு எஸ்கேப்பாகி விட்டார்கள்.

மேற்படி வழிப்பறி சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேற்கண்ட 2 இடங்களிலும் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். அப்போது, சனாபுல்லா, அவரது மகன் ஜாபர் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் விரைந்த கோவில்பட்ட போலீஸார், சனாபுல்லா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். திரைப்படம் எடுப்பதற்காக குடும்பத்தோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it