திருமணத்தை மறைத்து லவ்ஜிகாத் மூலம் காதல் வலையில் வீழ்த்தி, விஷயம் தெரிந்ததால் திருமணத்துக்கு மறுத்த ஹிந்து சிறுமியை கொலை செய்த முகமது ஷாரிக்கை போலீஸார் கைது செய்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை, லவ்ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களால் ஹிந்து பெண்கள் காதல் வலையில் வீழ்த்தப்படுவதும், திருமணத்துக்குப் பிறகு அப்பெண்களை கொடுமைப்படுத்துவதும், அடித்து உதைத்து சித்ரவதை செய்வதும், சில சமயங்களில் இது கொலையில் முடிவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில், டெல்லியில் ஷ்ரத்தா என்கிற இளம்பெண்ணை இஸ்லாமிய அடிப்படைவாதியான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், ஏற்கெனவே திருமணமான இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவன், சண்டிகரில் 18 வயது சிறுமியை லவ்ஜிகாத் காதல் வலையில் வீழ்த்தி, குட்டு அம்பலமானதால் அச்சிறுமியை கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன் முகமது ஷாரிக். இவன், வேலை நிமித்தமாக யூனியன் பிரதேசமான சண்டிகர் நகரின் அருகிலுள்ள புரைல் கிராமத்தில் வசித்து வந்தான். இவனுக்கு திருமணமாகி, மனைவி பீகாரில் வசித்து வருகிறார். இவனது பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர் சம்பா தேவி. இவருக்கு 18 வயதில் மம்தா என்கிற மகள் இருக்கிறார். பக்கத்து வீட்டில் வசிப்பதால் ஷாரிக்குக்கும், மம்தாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், மம்தாவை லவ்ஜிகாத் என்னும் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான் முகமது ஷாரிக். இருவரும் காதலித்து வந்த நிலையில், முகமது ஷாரிக்குக்கு திருமணமாகி மனைவி பீகாரில் வசிக்கும் விஷயம் மம்தாவுக்கு தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, முகமது ஷாரிக்குடன் பழகுவதை நிறுத்திய மம்தா, அவனது செல்போன் நம்பரையும் பிளாக் லிஸ்டில் போட்டு விட்டார். இதனால், முகமது ஷாரிக் ஆத்திரமடைந்தான். இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி மம்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதையறிந்த முகமது ஷாரிக், மம்தா வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். இதைப் பார்த்த மம்தா கூச்சலிட்டிருக்கிறார். ஆனால், அவரை கத்தவிடாமல் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறான் ஷாரிக். பின்னர், அங்கிருந்து நைசாக எஸ்கேப்பாகி, பீகாருக்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கிறான். இதனிடையே, வெளியே சென்றிருந்த சம்பா தேவி, வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, வீட்டிற்குள் மம்தா இறந்து கிடப்பதை பார்த்தவர், போலீஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, முகமது ஷாரிக், மம்தா வீட்டிற்குள் நுழைவதும், பின்னர் ஒன்றரை மணி நேரம் கழித்து திரும்பி வருவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து, போலீஸார் முகமது ஷாரிக்கை நகர் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது, அவன் பீகாருக்கு தப்பிச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தான். பின்னர், போலீஸார் முகமது ஷாரிக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.