கிறிஸ்துமஸ் “ஸ்பெஷல்” மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த ஹிந்து அமைப்பு நிர்வாகிகள்!

கிறிஸ்துமஸ் “ஸ்பெஷல்” மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த ஹிந்து அமைப்பு நிர்வாகிகள்!

Share it if you like it

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சாண்டா கிளாஸ் வேடமணிந்து மத மாற்ற முயற்சியில் ஈடுபட்ட கும்பலை, ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாடு முழுவதும் கிறிஸ்தவ மிஷனரிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் மத மாற்றம் செய்து வருகின்றனர். கர்நாடாக, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால், அங்கெல்லாம் மத மாற்றம் என்பது மிகவும் அரிதிலும் அரிதாக நடந்து வருகிறது. அதேசமயம், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மத மாற்றம் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் மத மாற்றம் உச்சத்தில் இருக்கிறது. பள்ளிகளில் தொடங்கி, கல்லூரி வரையிலும், நகரம் தொடங்கி கிராமங்கள் வரையிலும் இந்த மத மாற்றம் கன்ஜோராக நடந்து வருகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய சர்வேயில், இந்த மத மாற்றம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது. எனவே, நாடு முழுவதும் மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர, மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இம்மாதம் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. பொதுவாக, கிறிஸ்துமஸ் பண்டிகை வந்து விட்டாலே கிறிஸ்தவர்கள் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்து சாக்லேட் வழங்குவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டும் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே, கிறிஸ்தவர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து, கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் விசிட் அடித்து, வாழ்த்துக் கூறி வருகிறார்கள். இந்த சூழலில்தான், செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாண்டா கிளாஸ் வேடமணிந்து வந்த கிறிஸ்தவர்கள், மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதாவது, காயார் கிராமத்தில் ஹிந்து பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்படி இருக்க, கிறிஸ்தவர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து வாழ்த்துக் கூறுவதுபோல வந்து மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தகவலறிந்த ஹிந்து அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, நாங்கள் மத மாற்றம் செய்ய வரவில்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லத்தான் வந்தோம் என்று கூறியிருக்கிறார்கள். பதிலுக்கு ஹிந்து அமைப்பினர், இங்கு கிறிஸ்தவர்கள் வசித்தால் நீங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லலாம். ஆனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். அப்படி இருக்க, இங்கு உங்களுக்கு என்ன வேலை. முதலில் கிளம்புங்கள் என்று சொல்லி விரட்டி அடித்திருக்கிறார்கள். இதனால், அரண்டுபோன மத மாற்றி கிறிஸ்தவ கும்பல் அங்கிருந்து எஸ்கேப்பாகி இருக்கிறது.


Share it if you like it