நானும் கிறிஸ்டியன், என் மனைவியும் கிறிஸ்டியன்: உண்மையை ஒப்புக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

நானும் கிறிஸ்டியன், என் மனைவியும் கிறிஸ்டியன்: உண்மையை ஒப்புக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்!

Share it if you like it

நானும், என் மனைவியும் கிறிஸ்தவர்கள்தான் என்று கிறிஸ்துமஸ் விழாவில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பொதுவாகவே, திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும் ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மத சடங்குகளையும் இழிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். எனினும், எல்லோரும் இவ்வாறு செய்வதில்லை. குறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே, இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஹிந்து மதத்தை நிந்தனை செய்து வருகிறார். எனவே, இவர்கள் கிரிப்டோக்களாக இருப்பார்களா என்கிற சந்தேகம் ஹிந்துக்கள் மத்தியில் நிலவி வந்தது. அதற்கேற்றார்போல், திருமாவளவன் மேடைகளில் பேசும்போதும், தொலைக்காட்சி பேட்டிகளின் போதும் தான் கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகவும், இஸ்லாத்தை தழுவி விட்டதாகவும், பௌத்த மதத்தை தழுவிட்டதாகவும் கூறி, தான் ஒரு கிரிப்டோ என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். அதேபோல, தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் பலரும் கிரிப்டோக்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

ஆனால், தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா, கோயில் கோயிலாகச் சென்று, தாங்கள் ஹிந்துக்கள் என்பதை நிருபித்து வந்தார். இந்த சூழலில்தான், அக்குடும்பத்திலும் கிரிப்டோக்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் அம்பலமாகி இருக்கிறது. இதை ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது வாயாலேயே கூறியிருக்கிறார். அதாவது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை துறைமுகம் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பரிசுத் தொகுப்பை வழங்கி பேசினார். அப்போது, “திராவிட மாடல் என்றால் என்ன என்று எல்லோரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு, எப்போதுமே மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பார். ஆனால், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கும் செல்வார்.

இதோ தற்போது இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு “அல்லேலூயா” என்று வாழ்த்துச் சொல்கிறார். அமைச்சர் சேகர்பாபு சமூக நல்லிணக்கத்தோடு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இதுதான் திராவிட ஆட்சி. இதுதான் சமூக நீதி ஆட்சி. இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியைத்தான் முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். நானும் கிறிஸ்தவன்தான். நான் படித்தது டோன் போஸ்கோ பள்ளியில். கல்லூரி படித்தது லயோலா கல்லூரியில். நான் காதலித்து திருமணம் செய்தது ஒரு கிறிஸ்தவ பெண்ணை. இதை சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். இதைக் கேட்டால் சங்கிகளுக்கு வயிறு எரியும். என்னடா, சேகர்பாபு அல்லேலூயான்னு சொல்றாரு. உதயநிதி கிறிஸ்தவன்னு சொல்றாருனு நினைப்பார்கள்” என்று கூறியிருக்கிறார். உதயநிதி இவ்வாறு பேசியது எதேச்சையாக நடந்ததா அல்லது தன்னை அறியாமல் உளறி விட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், உண்மையை சொல்லி விட்டார் என்பதுதான் நிதர்சனம். இதன் மூலம் ஸ்டாலின் குடும்பமும் கிரிப்டோ என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.


Share it if you like it