அழுக்கு உருண்டை பிள்ளையார்: அவமதித்த கம்யூ. முத்தரசன்!

அழுக்கு உருண்டை பிள்ளையார்: அவமதித்த கம்யூ. முத்தரசன்!

Share it if you like it

விநாயகரை அழுக்கு உருண்டை பிள்ளையார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிந்துக்களின் முழு முதற் கடவுளாக விளங்குவது விநாயகப் பெருமான்தான். இதனால்தான், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹிந்துக் கோயில்களிலும் விநாயகர் சந்நிதி முதலில் இருக்கும். முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகுதான், உற்சவர், மூலவரை வணங்கும் வழக்கம் ஹிந்துக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தவிர, சனி பகவான் தொடாத ஒரு கடவுள் விநாயகர்தான். மேலும், எந்த தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பு விநாயகப் பெருமானுக்கு உண்டு. அதாவது, விநாயகப் பெருமானுக்கு மட்டுமே விநாயகர் சதுர்த்தி என்கிற தனியாக விழா எடுத்து கொண்டாடுகிறார்கள் ஹிந்துக்கள். அந்தளவுக்கு ஹிந்துக்களின் மனதில் நீக்கமற இடம்பெற்றிருப்பது விநாயகப் பெருமான்தான்.

இது ஒருபுறம் இருக்க, திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதும், அதேசமயம் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தி.க.வினரும், தி.மு.க. தலைவர்களும் வாழ்த்துச் சொல்லவில்லை. இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, தி.மு.க.வின் தலைவராக இஸ்லாமிய, கிறிஸ்தவ மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாததைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம், தமிழக முதல்வராக பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டியது மரபு. அப்படிச் செய்யாதது தவறு என்று சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வந்தனர்.

இந்த சூழலில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அழுக்கு உருண்டைக்கு எதற்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று விநாயகப் பெருமானை அவமரியாதையாகப் பேசி இருக்கிறார். இதுதான் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பாரிமுனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முத்தரசன், “பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் கங்கைக்கு குளிக்கப் போயிருக்கிறார். குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது. அந்த அழுக்கை உருட்டி வைத்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது. குளித்து முடித்த பிறகு அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார். ஆகவே, அந்த அழுக்கைப் போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும். அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

முத்தரசனின் இந்த பேச்சுதான் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான கணொளி தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, இதுவரை தி.க.வினரும், தி.மு.க.வினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களும் ஹிந்து தெய்வங்களை அவமதி்த்து வந்த நிலையில், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியினரும் அவமதிக்கத் தொடங்கி இருப்பது வேதனை அளிப்பதாக இருப்பதாக ஹிந்துக்கள் குமுறுகிறார்கள். மேலும், தி.மு.க.விடம் 10 கோடி ரூபாய்க்கு தங்களது கட்சியை அடமானம் வைத்திருக்கும் முத்தரசன், ஹிந்து தெய்வங்களை இழித்துப் பேசுவதில் வியப்பில்லையே என்றும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். அதோடு, சூடு, சொரணை உள்ள ஹிந்துக்கள், இதுபோன்ற ஹிந்து விரோதிகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்புவதோடு, தமிழகத்தில் ஹிந்து ஒற்றுமையையும், எழுச்சியையும் வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Share it if you like it