எலக்சன் அப்போ பாத்த எம்எல்ஏ இப்போதான் வராரு – திமுக எம்எல்ஏ -வின் கேலிக்கூத்து !

எலக்சன் அப்போ பாத்த எம்எல்ஏ இப்போதான் வராரு – திமுக எம்எல்ஏ -வின் கேலிக்கூத்து !

Share it if you like it

அதிக கொள்ளளவு தண்ணீர் இருந்ததால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர், மீஞ்சூர் அருகே சீமாபுரம் பகுதியில் கரையை உடைத்து வெளியேறியதால், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையன்சாவடி, பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. பொன்னேரி, மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீசியசூறைக்காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், 200-க்கும் மேற்பட்டமின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பொன்னேரி மூகாம்பிகை நகர், சின்னக்காவனம், பழவேற்காடு, வைரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன.

அதே போல், மழைநீர், கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கேஉள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், அப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழை நின்று 3 நாட்களுக்கு மேலாகியும் திருவள்ளூர் அருகே காக்களூர்- ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் வடியவில்லை. இதனால், மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறி நேற்று முன்தினம் பொதுமக்கள், காக்களூர்- சென்னை – திருப்பதி தேசியநெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புயல் வெள்ளம் வந்த பொழுதும், வந்த பின்பும் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாமல் வீட்டிலேயே சொகுசாக இருந்துவிட்டு நான்கு நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்ட மக்களையும், இடங்களையும் பார்ப்பதற்காக எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் சென்றுள்ளார். அவருக்கு மக்கள் சிறப்பான முறையில் மரியாதை அளித்து வரவேற்த்து உள்ளனர். அதில் பொதுமக்களில் ஒருவர் “ஏய் எம்எல்ஏ வராரு எல்லாரும் வாங்க, எலக்சன் அப்போ பாத்த எம்எல்ஏ இப்போதான் வராரு” என்று நக்கலாக வரவேற்ற காணொளியானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

https://x.com/ikkmurugan/status/1733054029301964954?s=20


Share it if you like it