ஒட்டுமொத்த நாடும் இந்தியர்கள் என்று சொல்லும். ஆனால், தமிழர்கள் மட்டும் திராவிடர்கள் என்று சொல்வார்கள். இதுதான் தமிழ்நாடு உருப்படாமல் போனதற்கு காரணம் என்று ஒரு சாமானியன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த தனியார் செய்தி சேனல் ஒன்று, உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது குறித்து சமானிய மக்களிடம் கருத்துக் கேட்கிறது. அப்போது, ஒருவர் கூறுகையில், “நானே அவங்க மேல (தி.மு.க.) செம காண்டுல இருக்கேன். எதாவது எக்குத்தப்பா சொல்லிவிடப் போகிறேன்” என்றபடியே பேச ஆரம்பிக்கிறார். “இந்தியாவில் 28 மாநிலம் 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. அனைத்து மாநில மக்களும் தங்களை இந்தியர்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் நம்மை இந்தியர்கள் என்று சொல்வது கிடையாது. திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், தாய் மொழி தமிழ், நாய் மொழி ஹிந்தின்னு சொல்லி எல்லாத்தையும் கெடுத்து குட்டுச் சுவராக்கி விட்டார்கள். தமிழகத்தில் 2 கோடி பேருக்காவது பேங்க், ரயில்வே, ராணுவம், போஸ்ட் ஆபீஸ் என மத்திய அரசு வேலை கிடைத்திருக்கும். எல்லாத்தையும் கெடுத்து குட்டிசுவராக்கி, திரும்பவும் ஹிந்தி எதிர்ப்பையே சொல்லிக்கிட்டு இருக்கான். நம்மளை இந்தியர்கள்னு சொல்லாத அளவுக்கு முட்டாள் ஆக்கிவிட்டார்கள்.
நாட்டில் ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. 5 வருடம் ஆட்சியில் இருக்கலாம். ஓட்டுன்னா என்னா, ஓட்டு வாங்குனவனுக்கு என்னா வேலை என்பது பற்றி என்னால் விளக்க முடியும். எவனாவது ஒருத்தன் அந்த வேலையை ஒழுங்கா செய்யுறானா? பொழுது போயி பொழுது வந்தா போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், ரயிலை மறிக்கிறது, பஸ்ஸை மறிக்கிறது, இதுக்குப் பேரு ஜனநாயகமா? எம்.எல்.ஏ. ஃபண்டு, எம்.பி. ஃபண்டு, அந்த ஃபண்டு, இந்த ஃபண்டுன்னு பணம் ஒதுக்கிறான் பாரு, அதான் மிகப் பெரிய தவறு. 5 சதவிகிதம், 10 சதவிகிதம்னு வேலையே செய்யாம கமிஷன் வாங்கிட்டு போயிடறான்” என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.