1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதில் 11 சங்க கார்யகர்த்தர்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, ஜிகாத் கமிட்டி நிறுவனர் பழனி பாபா, இமாம் அலி உட்பட 18 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடா சட்டத்தின் கீழ் கைது செய்தது. விசாரணை நடைபெற்ற காலத்திலேயே 1997 இல் பழனி பாபாவும், 2002 இல் இமாம் அலியும் இறந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கு 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனையை விதித்தது. தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
குண்டுவெடிப்பில் இடிந்து விழுந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலக கட்டிடத்தின் பெரும்பகுதியை மீண்டும் கட்டுவதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் அவரது அரசும் நிதியுதவி அளிக்க முன்வந்தனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அவரது வாய்ப்பை நிராகரித்து ஒரு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழுச்சி பெற்று ஒரே வருடத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தை மீண்டும் கட்டமைத்தது.
இந்த பயங்கரவாத சக்திகள் நம்மில் சிலரை வெடிகுண்டு வைத்து கொல்லலாம். ஆனால் நம்மில் வேரூன்றியிருக்கும் இந்து உணர்வை அவர்களால் கொல்லவே முடியாது. இந்த உலகில் கடைசி இந்து இருக்கும் வரை, இந்து உணர்வு இருக்கும், அதன் மூலம் பாரதமும் இருக்கும். இந்து தியாகிகள் தினமான (ஆகஸ்ட் 8) இந்நாளில், அவர்களை வணங்குவோம்.