கரன்ட் பில்லுலாம் கட்டணும், 5 ரூபாயாவது கொடுங்க என்று குடிமகனிடம் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பரிதாபமாகக் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்திலுமே குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தட்டிக் கேட்டால், கரூர் கம்பெனி என்கிற பெயரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆட்களுக்கு மாதம்தோறும் 40,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கப்பம் கட்ட வேண்டி இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், பாட்டிலுக்கு 10 ரூபாய் தர மறுத்த குடிமகனிடம், கரன்ட் பில்லு எல்லாம் கட்டணும், 5 ரூபாயாவது கொடுங்க என்று டாஸ்மாக் ஊழியர் அப்பாவித்தனமாகக் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை திருவெற்றியூர் தேரடி பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையில்தான் இப்படியொரு கூத்து அரங்கேறி இருக்கிறது.